
ஈரப்பதம் அதிகமுள்ள கிழக்கு திசை காற்று காரணமாக தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்துள்ளது
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தை பொறுத்தவரை பல இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்
கடந்த 24 நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 8 cm, பரங்கிபேட்டையில் 4 cm மழையும் பெய்துள்ளது
சென்னையை பொறுத்தவரை இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும் என்றும்,வானம் மேகமூட்டத்துடனும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
முன்னதாக தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்தது.அதனை தொடர்ந்து தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கி இருப்பதால் மழை தொடர்ந்து வர வாய்ப்பு உள்ளது. பொதுவாகவே சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பெய்த மழை 31 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது