திமுக 2 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்து வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் விதமாக #2YrsOfDravidianModel என்கிற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகிறது.
திமுக அரசு கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றது. அதன்மூலம் தான் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என சொல்லி முதல்வராக பொறுப்பேற்றது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. அந்த நிகழ்வு நடந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தற்போது திமுக வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
Wishing our Hon Chief Minister , Hon Ministers, MLAs & The Govt of Tamil Nadu, a glorious pic.twitter.com/NEVEI8g0Rd
— Manoj Mehta (@ManojMehtamm)மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்ததை திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி திமுக அரசு இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றிய வாக்குறுதிகள் என்னென்ன என்பதை விளக்கும் விதமாக பாடலும் வெளியிட்டு இருந்தனர். அந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Exactly on the same day, Muthuvel Karunanidhi Stalin Era Emerges...
The rest is History..🔥 pic.twitter.com/7Ee542Pnj6
இதையும் படியுங்கள்... இந்த ஆட்சி திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் தான்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பல்வேறு அரசியல் கட்சி பிரபலங்கள் திமுக வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் திமுகவின் சாதனைகளை விளக்கும் விதமாக 2YrsOfDravidianModel என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி திமுகவினர் பல்வேறு பதிவுகளையும் போட்டு வருகின்றனர்.
Happiness and smile are the answer for Dravidian model listeners - Chief Minister M.K. Stalin pic.twitter.com/BVb6Svf2Sm
— Pandian (@itz_pandian)இப்படி இன்று டுவிட்டர் முழுவதும் திமுக பற்றிய டுவிட்டுகள் தான் நிரம்பி வழிகின்றன. இதன் எதிரொலியாக டுவிட்டரில் 2YrsOfDravidianModel என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. டுவிட்டர் டிரெண்டிங்கில் 2YrsOfDravidianModel ஹேஷ்டேக் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால் திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்றைய நாளில் திமுகவினர் பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகளை செய்தும் வெற்றிகரமாக இரண்டு ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ததை கொண்டாடி வருகின்றனர்.
DMK government enters into third year after winning social justice pic.twitter.com/RmXb6INmec
— Satyam (@iSatyam100)The Golden Age of Tamil Nadu!
🔹Inclusive Growth
🔹Even Opportunities
🔹Sustainable Development
🔹 Happy Citizens pic.twitter.com/rYMFJo3eoM
இதையும் படியுங்கள்... ஊர்தோறும் வளர்ச்சி.. துறைதோறும் மலர்ச்சி! திராவிட மாடல் ஆட்சி தொய்வின்றி தொடரும் - மு.க.ஸ்டாலின் டுவிட்