தஞ்சையில் அரசு டாஸ்மாக் கடையில் மது அருந்திய 2 பேர் மரணம்

By SG Balan  |  First Published May 21, 2023, 4:06 PM IST

கள்ளச்சாராய மரணங்கள் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தஞ்சை டாஸ்மாக் கடையில் மது அருந்திய இருவர் இறந்துள்ளனர்.


தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழ அலங்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் அரசு மதுபானம் கடை இயங்கி வருகிறது. பார் வசதியுடன் கூடிய இந்த டாஸ்மாக் கடையில், முறைகேடாக மது வாங்கி அருந்திய இருவர் உயிரிழந்துவிட்டனர்.

இறந்த இருவரும் இந்த டாஸ்மாக் கடைக்கு எதிரில் உள்ள மீன் மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள் என்று தெரியவந்துள்ளது. குப்புசாமி என்ற 60 வயது முதியவர் ஒருவரும், விவேக் என்ற 35 வயது இளைஞர் ஒருவரும் மது அருந்தியதும் இறந்துள்ளனர். இவர்கள் இருவரும் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே டாஸ்மாக் பாரில் திருட்டுத்தனமாக விற்கப்பட்ட மதுவை வாங்கி அருந்தியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

மது அருந்திய குப்புசாமி கடைக்கு வெளியே வந்த உடனேயே வாயில் நுரைதள்ளியபடி கீழே சுருண்டு விழுந்தார். அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

கோடை விடுமுறையில் தென் மாவட்டங்களுக்கு 244 முறை இயக்கப்படும் 50 சிறப்பு ரயில்கள்

சம்பவம் நடந்த இடத்தில் உள்ள டாஸ்மாக் கடை அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி அதிகாலை முதலே செயல்பட்டு வருகிறது என்றும் கடையின் பாரில் வைத்து கள்ளத்தனமாக மது விற்பனை நடந்துவருகிறது என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதன்படி, இன்றும் காலையிலும் பலர் டாஸ்மாக் பாருக்குச் சென்று கள்ளத்தனமாக விற்கப்பட்டும் மதுவை வாங்கி அருந்தியதாகவும் ஊர் மக்கள் சொல்கின்றனர்.

இதுவரை இரண்டு பேர் இறந்துவிட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதைப்பற்றி தகவல் அறிந்த தஞ்சை போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரும் நேரில் போய் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்காக கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மதுவின் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 23 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து தஞ்சையில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் மது அருந்திய குடிகாரர்கள் உயிரை விட்டிருப்பது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை.! முழு விபரம்

click me!