கம்பத்தில் புது வீடு கட்டுவதில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் போலீஸ்காரர் மனைவி 2 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
கம்பத்தில் புது வீடு கட்டுவதில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் போலீஸ்காரர் மனைவி 2 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் புதுப்பள்ளிவாசல் அருகே உள்ள சமையன் தெருவை சேர்ந்தவர் அழகுதுரை (வயது 34). இவர், கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய மனைவி ஜெயமணி (28). இவர்களுடைய மகள் தேஜாஸ்ரீ (8), மகன் காசி விஸ்வநாதன் (3) என்ற குழந்தைகள் உள்ளனர். தற்போது கம்பத்தில் புது வீடு கட்டுவது தொடர்பாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நேற்றும் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மதியம் 3 மணியளவில் சாப்பிட அழகுதுரை வந்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் திறக்காததால், மனைவி, குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாக நினைத்து மீண்டும் காவல் நிலையம் சென்றுவிட்டார் பிறகு இரவு 8 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போதும் கதவு பூட்டியே இருந்தது. இதனால் அழகுதுரை மாமியார் வீட்டிற்கு சென்று விசாரித்தார்.
undefined
அங்கு ஜெயமணி குழந்தைகளுடன் வரவில்லை என தெரிவித்தனர். மீண்டும் வீட்டிக்கு விரைந்த அழகுதுரை சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு தண்ணீர் தொட்டியில் இரண்டு குழந்தைகளும் பிணமாக மிதந்தனர். உள்ளே இருந்த அறையில் ஜெயமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் இருந்தார், இதனை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ஜெயமணி உள்பட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு ஜெயமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.