திமுக, அதிமுக எந்த ஆட்சி அமைந்தாலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்பட உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால், சமீபத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் ஒரே நேரத்தில் பெரிய அளவிலான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் நடைபெற்றுள்ளது.
நகராட்சி நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திமுக, அதிமுக எந்த ஆட்சி அமைந்தாலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்பட உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால், சமீபத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் ஒரே நேரத்தில் பெரிய அளவிலான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 40-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். பிறகு மே மாதம் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவந்த பின்பு செயலாளர்கள் பொறுப்புகளில் பெரிய அளவு மாற்றம் நடந்தது. குறிப்பாக, உள்துறை, நிதித்துறை, சுகாதாரம், உணவு பாதுகாப்புத்துறை என முக்கியத் துறை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க;- தக்காளியை ஓவர்டேக் செய்த பச்சை மிளகாய்.. வெங்காயம் விலையும் உச்சம்.. எவ்வளவு தெரியுமா?
அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தில் முக்கியத் துறைகளின் செயலாளர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். இந்நிலையில், தற்போது இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஊரக வளர்ச்சி துறை இயக்குனராகவும், வருவாய் துறை இணை ஆணையர் சிவராசு நகராட்சி நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்படுவதாக தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க;- குழந்தையின் தாய்க்கு ஆறுதல் கூறவேண்டிய அமைச்சரே மனம் புண்படும்படி பேசுவது நியாயமா?மா.சு.க்கு எதிராக சீறும் OPS