
தமிழக - கர்நாடக அரசுக்கு பெரும் சவாலாக இருந்த சந்தனக் கடத்தல் வீரப்பன், தமிழக சிறப்பு அதிரடிப்படையால் என்கவுன்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
முன்னதாக அவரது கூட்டாளிகள் பலரும் சிறைவாசம் அனுபவித்து வந்தனர். அந்த வகையில், 1987ஆம் ஆண்டில் வனச்சரகர் சிதம்பரம் கொலை வழக்கில் வீரப்பனின் அண்ணன் மாதையன், பெருமாள், ஆண்டியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 35 ஆண்டுகள் சிறையில் இருந்த வீரப்பன் அண்ணனான மாதையனை விடுவிக்குமாறு தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால், அவர் சிறையிலேயே உயிரிழந்து விட்டார்.
இதையும் படிங்க..பால் விலை உயர்வு - தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு !
இந்த வழக்கில் ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர் மட்டும் கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர். இந்தச் சூழலில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோரை தண்டனைக் காலத்தை கணக்கில் கொண்டும், நன்னடத்தையின் காரணமாகவும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அண்ணா பிறந்தநாளையொட்டி, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், நன்னடத்தை அடிப்படையில் தமிழக அரசால் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆண்டியப்பன், பெருமாள் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க..2 கோடிக்கு கிராமம் விற்பனை.! நல்ல ஆஃபர் யார் வேணாலும் வாங்கலாம் !! இவ்வளவு வசதிகள் இருக்கா ?