ஆம்ஸ்டிராங் படுகொலை எதிரொலி: தாம்பரம் கமிஷனர் உள்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

By SG Balan  |  First Published Jul 9, 2024, 10:12 PM IST

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அமலாக்க பணியகம் சிஐடி ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் காவல் ஆணையராக ஐபிஸ் அதிகாரி அபின் தினேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.


பகுஜன் சமாஹ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைத் தொடர்ந்து தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளே கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளன. இதனால் தமிழக அரசு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், திங்கட்கிழமை சென்னை காவல் ஆணையர் அதிரடியாக மாற்றபட்டார். அதன் தொடர்ச்சியாக, இன்று (செவ்வாய்க்கிழமை) ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

Tap to resize

Latest Videos

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அமலாக்க பணியகம் சிஐடி ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் காவல் ஆணையராக ஐபிஸ் அதிகாரி அபின் தினேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி கண்ணனும், சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையராக நரேந்திரன் நாயரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க், தென் மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேலம், திருப்பூர் மாநகர கமிஷனர்களும் மாற்றப்பட்டுள்ளனர். சேலம் மாநகர காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் அபிமன்யுவும் சேலம் காவல் ஆணையராக இருந்த விஜயகுமாரி ஆயுதப்படை ஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகர காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி லட்சுமியும் நியமிகப்பட்டுள்ளனர்.

சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டிஜிபியாக சந்தீப் மிட்டல், ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால், கடலோர காவல் படை ஏடிஜிபியாக சஞ்சய் குமார்,பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் காவல்துறை தலைவர் அலுவலக ஏடிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் பெற்றுள்ளார். சிபிசிஐடி ஐஜியாக உள்ள டிஎஸ் அன்புவிடம் கூடுதல் பொறுப்பாக சென்னை சிபிசிஐடி ஏடிஜிபி பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

click me!