16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்.. தாய் உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

By Thanalakshmi VFirst Published Aug 18, 2022, 12:10 PM IST
Highlights


ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஈரோடு மாவட்டத்தை சேந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுக்குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த, ஈரோடு சூரம்பட்டி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். 

அதில் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுத்து ஈரோடு, பெருந்துறை, ஒசூர், சேலம், திருப்பதி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இதனையடுத்து இதுக்குறித்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் சுமையா என்ற இந்திராணி , சிறுமியின் வளர்ப்பு தந்தை சையத் அலி , இடைத்தரகர்ளாக செயல்பட்ட மாலதி மற்றும் ஆதார் அட்டையைத் திருத்தி கொடுத்த ஜான் உள்ளிட்ட நான்கு பேரை போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்க:அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அறுவை சிக்கிச்சை.. முதலமைச்சர் உத்தரவு..

இதனிடையே தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையிலான குழு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் அரசால் நியமிக்கப்பட்ட இந்த குழு, சிறுமி மற்றும் கருமுட்டை பெற்றதாக புகார் எழுந்த மருத்துவமனையிடம் விசாரணை நடத்தியது. விசாரணையின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்து, ஸ்கேன் மையங்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள, நான்கு பேரையும், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஈரோடு எஸ்பி கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில், ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி குண்டாஸ் போட உத்தரவிட்டார். தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க:மதுரையில் மனைவி, மகள், மகனை துடிதுடிக்க கொன்றுவிட்டு விவசாயி தற்கொலை முயற்சி.. என்ன காரணம் தெரியுமா?

click me!