அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அறுவை சிக்கிச்சை.. முதலமைச்சர் உத்தரவு..

By Thanalakshmi VFirst Published Aug 18, 2022, 11:25 AM IST
Highlights

ஆவடி அருகே முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து செய்திகள் வெளியான நிலையில், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, முகச்சிதைவு நோயால பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. மேலும் குழந்தையின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்யவும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
 

ஆவடி வீராபுரத்தில் முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி படிப்பை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டிருந்தார். இதுக்குறித்து ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், சிறுமிக்கு தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராப்புரம்ஸ்ரீவாரி பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ்- செளபாக்யா தம்பதியினருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள், மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளன.

மேலும் படிக்க:உயிருக்கு போராடும் யானை..! டிரோன் மூலம் தேடும் வனத்துறை... மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்க திட்டம்

9 வயதாகும் மூத்த மகள் டானியா, வீராப்புரம் அரசினர் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அரியவகை முகச்சிதைவு நோயால் கடந்த 6 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளார். நோயினை குணப்படுத்த பல்வேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அலைவதாகவும் அரசு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இதுக்குறித்த செய்தி வெளியான எதிரொலியாக, முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியை நேரில் சென்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சந்தித்தார்.

மேலும் திருவள்ளூர் மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்தனர். அவருக்கு இதுவரை அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர். முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டது. பின்னர் பேட்டி அளித்த ஆட்சியர், அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிறுமிக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்து தரப்படும் என்றார்.

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறப்பு விவகாரம்.. நீதியை பெற்று தர துணை நிற்போம் - சீமான் !

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாட்களில் சிறுமிக்கு சிகிச்சை தொடங்கவுள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் கச்சிதைவு நோயால பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. மேலும் குழந்தையின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்யவும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

 

click me!