
திருவள்ளூர்
திருவள்ளூரில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்துவிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட 150 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் காந்தி சாலையில் உள்ள இராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியை புறக்கணித்துவிட்டு நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள, "அரசு அறிவித்த புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி தங்களுக்கு 21 மாத நிலுவை தொகையினை வழங்க வேண்டும்" போன்ற ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவலாளர்கள் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ இணைப்பு சங்கங்களை சேர்ந்த பிரகாசம், நரசிம்மன், பரந்தாமன் சௌத்ரி, உள்ளிட்ட 90 ஆரிரியர்கள், 60 ஆசிரியைகள் என மொத்தம் 150 பேரை கைது செய்தனர். அவர்களை திருத்தணி பைபாஸ் சலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.