காவலில் செல்லும் அஸ்வினியை கொலை செய்த அழகேசன்...! எத்தனை நாட்கள் தெரியுமா?

 
Published : Mar 10, 2018, 06:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
காவலில் செல்லும் அஸ்வினியை கொலை செய்த அழகேசன்...! எத்தனை நாட்கள் தெரியுமா?

சுருக்கம்

15 days court jail for azhakesan about aswini killed case

சென்னையில் கல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்த வழக்கில் அழகேசனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி அஸ்வினி. இவர் கே.கே.நகர் மீனாட்சி கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். 

இந்நிலையில் இன்று வழக்கம்போல் அஸ்வினி கல்லூரிக்கு சென்றார். கல்லூரி முடித்துவிட்டு சில மணி நேரத்திற்கு முன்பு கல்லூரி வாயிலின் வெளியே நின்று கொண்டிருந்தார். 

அப்போது திடீரென அஸ்வினியை ஒரு நபர் கத்தியால் குத்தினார். இதில் மாணவி ரத்தம் வெளியேறி உயிருக்கு போராடினார். 

இதைப்பார்த்த பொதுமக்கள் அஸ்வினியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் மாணவியை கத்தியால் குத்திய நபரை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து பிடித்து அடித்து போலீஸில் ஒப்படைத்தனர். 

இந்நிலையில், அஸ்வினி மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் எனவும் கொலையாளி பெயர் அழகேசன் எனவும் அவரும் மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. 

மேலும் அழகேசனை காதலித்து ஏமாற்றியதால் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து  எம்ஜிஆர் நகர் காவல்நிலையத்தில் விசாரணை முடிந்த பின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி மோகனா முன்பு அழகேசனை போலீசார் ஆஜர்படுத்தினர்.

அழகேசனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!