12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்கள்! 5 பாடங்களில் செண்டம் எடுத்த திண்டுக்கல் மாணவி!

Published : May 08, 2025, 01:43 PM IST
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்கள்! 5 பாடங்களில் செண்டம் எடுத்த திண்டுக்கல் மாணவி!

சுருக்கம்

தமிழ்நாடு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 அன்று வெளியிடப்பட்டன. 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர், அரியலூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்தது. திண்டுக்கல் மாவட்ட மாணவி ஓவியாஞ்சலி 599 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

 மார்ச் 3ம் தேதி தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வு 

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வை 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ-மாணவிகள் எழுதினர். இதனையடுத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 4ம் தேதி முதல் தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 83 மையங்களில் விடைத்தாள் திருத்துதல் பணிகள் நடந்தது. சுமார் 46,000 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். மதிப்பெண் விவரம் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியும் முடிக்கப்பட்டது.

முன்கூட்டியே வெளியான தேர்வு முடிவுகள்

முதலில் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வு முடிவுகள் மே-9ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு நாள் முன்னதாகவே அதாவது இன்றே வெளியிடப்பட்டது.  தமிழகத்தில் 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதிய நிலையில்  7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு  கூடுதல் விகிதத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 

அரியலூர் மாவட்டம் முதலிடம் 

12ம் வகுப்பு தேர்வில் மாணவிகள் 96.70 சதவீதம் பேரும், மாணவர்கள் 93.16 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.82 சதவிகிதத்துடன் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது. 

 600-க்கு 599 மதிப்பெண்கள் 

இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ஓவியாஞ்சலி என்ற மாணவி 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். இந்த மாணவி ஆங்கில பாடத்தில் மட்டும் 99 மதிப்பெண்களும், மற்ற பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து மாணவி ஓவியஞ்சலிக்கு அவர் படித்த பள்ளியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் மாணவியை கட்டித் தழுவி பாராட்டினர். ரிசர்வ் வங்கியில் வேலை செய்வதே தனது இலக்கும் என்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகப் போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!