10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்.. பதற்றம் இல்லாமல் எழுதுங்கள்.. முதல்வர் ஸ்டாலின், விஜய் வாழ்த்து!

By vinoth kumar  |  First Published Mar 26, 2024, 8:13 AM IST

தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு கடந்த, 1ம் தேதி தொடங்கி, 22ம் தேதி நிறைவடைந்தது. அதேபோல் பிளஸ் 1 பொதுத்தேர்வு இந்த மாதம், 4ம் தேதி தொங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொங்கி, வருகின்ற ஏப்ரல் மாதம், 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி நிறைவடைகிறது. 

தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு கடந்த, 1ம் தேதி தொடங்கி, 22ம் தேதி நிறைவடைந்தது. அதேபோல் பிளஸ் 1 பொதுத்தேர்வு இந்த மாதம், 4ம் தேதி தொங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொங்கி, வருகின்ற ஏப்ரல் மாதம், 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வில் தமிழ்நாடு புதுச்சேரியை சேர்ந்த 12,616 பள்ளிகளை சேர்ந்த 9,10,023  மாணவ மாணவியர் எழுதுகின்றனர். இவர்களில் 4,57,525 பேர் ஆண்களும், 4,52,498 பேர் பெண்களும் அடங்குவர். 

Latest Videos

undefined

இதையும் படிங்க: இருக்கிற பிரச்சனை போதாதுன்னு இதெல்லா இது வேறயா? ஓபிஎஸ் இனிசியலுடன் கூடிய ஓ.பன்னீர்செல்வம் போட்டி.!

தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், கழிவறை வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனம் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்வு நடக்கும் நாட்களில் தேர்வு மையங்களை கண்காணிக்கவும், சோதனையில் ஈடுபடவும் 3,350 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின், டிடிவி.தினகரன், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best! 

நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள் என பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: வயிற்று வலியால் துடித்த பள்ளி மாணவி.. மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

அதேபோல், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

click me!