
10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் இன்று முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.205 செலுத்தியும், 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275 செலுத்தியும், உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305 செலுத்தியும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆம் தேதி மாநில பாடத்திட்டத்தில் கீழ் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்தாண்டு 12 ஆம் வகுப்பில் 93.76 சதவீத பேரும் 10 ஆம் வகுப்பில் 90.07 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ம் வகுப்பில் மொத்தம் 8,06,277 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
மேலும் படிக்க:Alert : முகக்கவசம் கட்டாயம்.! தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் அமலுக்கு வந்தது - எந்த மாவட்டம் ?
அதே போல் 10 ஆம் வகுப்பில், பொதுத்தேர்வை 9.12 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.2% பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், 90.07 % ஆக தேர்ச்சி குறைந்துள்ளது.
10 ஆம் வகுப்பு தேர்வில் 97.22 % பெற்று, கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தை பிடித்தது. பெரம்பலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. 12 ஆம் தேர்வில் பெரமபலூர் மாவட்டம் 97.95% தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்தது. வேலூர் மாவட்டம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் இன்று முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.205 செலுத்தியும், 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275 செலுத்தியும், உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305 செலுத்தியும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அரசு கலை கல்லூரிகளில் சேர்க்கை.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. உயர்கல்வித்துறை புது அறிவிப்பு..