சென்னை மக்களே உஷார்.. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு திடீர் அதிகரிப்பு.. பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

By vinoth kumarFirst Published Jun 22, 2022, 9:01 AM IST
Highlights

 சென்னை மற்றும் அதன் புறநகர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 250 கன அடியில் இருந்து 500 கன அடியாக உயர்த்தப்பட உள்ளது.

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 775 கனஅடியாக உயர்ந்ததையடுத்து ஏரியில் இருந்து 250 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக உயர்த்தப்பட உள்ளது. இதனால், கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றானது செம்பரம்பாக்கம் ஏரி. 6,303 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி 3.6 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டது. இதன் நீர் மட்டம் 24 அடியாகும். காட்ரம்பாக்கம், மலையம்பாக்கம், சிறுகளத்துார், காவனுார், குன்றத்துார் ஆகிய 5 ஊர்களின் எல்லையில் இந்த ஏரி அமைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக, ஏரி நீர் பயன்படுத்துவதால், திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம், பழந்தண்டலம், சிறுகளத்துார் ஆகிய ஊர்களில், ஆயிரம் ஏக்கர் விவசாயத்திற்கு மட்டுமே, தண்ணீர் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 250 கன அடியில் இருந்து 500 கன அடியாக உயர்த்தப்பட உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இரவு பெய்த கன மழை காரணமாக வினாடிக்கு 775 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

ஏரியில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் உபரி நீர் வெளியேற்றம் காலை 9 மணிக்கு 250 கன அடியில் இருந்து 500 கன அடியாக உயர்த்தப்படவுள்ளது. இதனால், கரையோரத்தில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். காலை நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3645 மில்லியனின் 3540 மில்லியன் இருப்பு உள்ளது. ஏரியின் நீரமட்டம் 24 அடியில் 23.60 அடி உயர்ந்தது. 

இதையும் படிங்க;- காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை

click me!