சென்னையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை.. இன்னிக்கும் சம்பவம் இருக்கா? வானிலை மையம் பகீர் தகவல்.!

By vinoth kumarFirst Published Jun 22, 2022, 8:16 AM IST
Highlights

சென்னையில் 3வது நாளாக நேற்று மாலை தொடங்கி விடிய விடிய கொட்டிய மழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால், சில இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

சென்னையில் 3வது நாளாக நேற்று மாலை தொடங்கி விடிய விடிய கொட்டிய மழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால், சில இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில்  கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையை பெய்து வருகிறது. நேற்று மாலை தொடங்கிய மழை விடாமல் விடிய விடிய கொட்டி தீர்த்தது. சென்னையில் இடைவிடாமல் பெய்த மழையின் காரணமாக  சாலைகளில் தண்ணீர் தேங்கியது. 

இதையும் படிங்க;- கவனத்திற்கு !! சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அப்டேட்..

சென்னையில் தியாகாராய நகர், கோடம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், தியாகாராய நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் கூறுகையில்;- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க;- பெற்றோர் எதிர்ப்பை மீறி ஓடியோய் திருமணம்.. காதல் கணவருக்கு அந்த பழக்கமா? மன உளைச்சலில் புதுப்பெண் தற்கொலை.!

click me!