நேற்று பகலில் சென்னை முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இரவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நுங்கம்பாக்கம், எழும்பூர், அண்ணாசாலை, போரூர், ராயப்பேட்டை, கிண்டி, அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , திருவொற்றியூர், எண்ணூர், மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
சென்னையில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இரவில் பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று பகலில் சென்னை முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இரவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நுங்கம்பாக்கம், எழும்பூர், அண்ணாசாலை, போரூர், ராயப்பேட்டை, கிண்டி, அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , திருவொற்றியூர், எண்ணூர், மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பல இடங்களில் நீர் தேங்கியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்தடை காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் மின் தடை ஏற்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை பகுதிக்குட்பட்ட வ.உ.சி நகர் திருவள்ளுவர் குடியிருப்பில் முதல் பிரதான சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பற்றி எரிந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதற தொடங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர். இதனையடுத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
undefined
சென்னை அசோக் நகர் பகுதியில் கனமைழயால் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, மரத்தை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், சென்னை புறநகர் பகுதிகளான பூவிருந்தவல்லி, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் கோடை மழை பெய்தது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தாம்பரம் 13 செ.மீ., தரமணி 11 செ.மீ., கட்டப்பாக்கம் 9.5 செ.மீ., சென்னை விமான நிலையம் 9.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.