முதல்வர் ஜெ. மறைவு எதிரொலி : 10, 12ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

Asianet News Tamil  
Published : Dec 07, 2016, 08:12 AM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
முதல்வர் ஜெ. மறைவு எதிரொலி : 10, 12ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

சுருக்கம்

முதல்வர் ஜெயலலிதா மறைவால் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றும், 6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 9ம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்கும் என அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் காலமானார். இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று நடக்க இருந்த அரையாண்டு தேர்வு வரும் 9ம் தேதியும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

இடி மின்னலுடன் மணிக்கு 50 கி.மீ வேகம்.. தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை?
Vijay Government: 'விஜய்யை ஆட்சியமைக்க கூப்பிடுங்க!' - ஆளுநருக்கு விசிக அழுத்தம்