வாட்டி வதைக்கும் வெயில்... 15 இடங்களில் 100 டிகிரியை கடந்ததால் மக்கள் அவதி!!

By Narendran S  |  First Published May 17, 2023, 9:26 PM IST

தமிழகத்தில் இன்று 15 இடங்களில் 100 டிகிரியை கடந்து வெயில் பாதிவாகியுள்ளது.


தமிழகத்தில் இன்று 15 இடங்களில் 100 டிகிரியை கடந்து வெயில் பாதிவாகியுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக உள்ளதால் மக்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். வங்கக் கடலில் உருவான புயல் தற்போது மியான்மரில் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும் போது வங்கக் கடல் பகுதியில் இருந்து ஈரப்பதத்தை அதிகமாக உறிஞ்சியதால், இந்தியாவின் தரைப்பகுதியில் காற்றில் ஈரப்பதம் குறைத்து வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது.

இதையும் படிங்க: என்ன நடவடிக்கை எடுத்தீங்க? கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்கும் ஆளுநர் ரவி

Latest Videos

அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் அதிகரிக்கத் வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை மீனம்பாக்கத்தில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. நேற்று மீனம்பாக்கத்தில் 109 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில் இன்று சற்று வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.

இதையும் படிங்க: கள்ளச்சாராய வழக்குகள் கொலை வழக்காக மாற்றம்: டிஜிபி சைலேந்திர பாபு அறிவிப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று 99 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. வேலூர், திருத்தணியில் இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. திருவண்ணாமலையில் 103 டிகிரி, சேலத்தில் 100 டிகிரி, ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. மதுரை விமான நிலையம் 104, திருச்சி – 103, பாளையங்கோட்டை 102, தஞ்சை 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

click me!