திருச்சி NIT-யில் 10 மாணவர்களுக்கு கொரோனா… ஒமைக்ரான் தொற்றாக இருக்கும் என்பதால் அதிர்ச்சி!!

By Narendran SFirst Published Jan 3, 2022, 6:00 PM IST
Highlights

திருச்சி என்ஐடியில் பயின்று வரும் 10 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி என்ஐடியில் பயின்று வரும் 10 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. இதனால் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் ஓமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது பரவ தொடங்கியுள்ளது. இது ஒருபுறம் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 27,51,128 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு அதிகமாக இருந்தாலும் கொரோனா உயிரிழப்பு குறைவாக பதிவாகி ஆறுதலை தருகிறது. இதுவரை கொரோனாவுக்கு 36,790 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து மேலும் 624 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 27,05,034 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் மிக மிக குறைவாக இருக்கிறது. 9,304 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,02,029 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,76,50,087 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 776 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீட் பயிற்சி மையம் ஒன்றில், 34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீட் பயிற்சி மையத்தில் மாணவ- மாணவிகள் தங்கி படித்து வந்த நிலையில் முதலில் ஒரு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதை அடுத்து, அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. சுமார் 90 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தற்போது அதேபோல் திருச்சி என்ஐடியில் பயின்று வரும் 10 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து ஒமைக்ரான் தொற்று உள்ளதா என கண்டறிய கொரோனா பாதித்த மாணவர்களின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி என்ஐடியில் தற்போது தொற்று உறுதியானவர்களில் பலர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்டுகிறது. வெளியூர் சென்று திரும்பிய 577 மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!