
இந்தியாவிலேயே கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஓமைக்கரான் கொரோனா தொற்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துதலை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழகம் முழுதும் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 17 கட்டமாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை 8 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. அதில் 87% பேர் முதல் டோஸ் செலுத்திக்கொண்டுள்ளனர். 60.71% பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவிலேயே கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒமைக்ரானால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு 24 மணி நேரத்தில் இரண்டுமுறை டெஸ்ட் எடுக்கப்படுவதாக கூறினார். மேலும் தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 121 பேரில் தற்போது 23 மட்டுமே சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்தார். அதோடு ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் 4 முதல் 5 நாட்களிலேயே தொற்று பாதிப்பில் இருந்து சரியாகிவிடுவதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் இதுவரை 8 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 87% பேர் முதல் டோஸ் போட்டுள்ளனர் என்றும், 60.71% பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நாட்டிலேயே கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது என்றும் தயக்கமின்றி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதேபோல் மத்திய அரசு அறிவுறுத்தியபடி வரும் 10 ஆம் தேதி முன்களப்பணியாளர் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணியை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.