விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு கருப்பசாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் கருப்பசாமி, செந்தில்குமார் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடதிதிலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் அடிக்கடி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனை, முறையாக ஒழுங்குப்படுத்த வேண்டும் என அரசுக்கு அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு கருப்பசாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
undefined
அப்போது பட்டாசு வெடி மருந்தில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் இருந்த இரண்டு அறைகள் இடிந்து தரைமட்டமாகின. விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 7 பேரை மீட்கப்பட்டு சிவகாசி மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி ஆலை உரிமையாளர் கருப்பசாமி, ஊழியர் செந்தில்குமார் உள்ளிட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே ஜனவரி 1ம் தேதி நடந்த பட்டாசு வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.