ஐயயோ.. புத்தாண்டு அதுவும் இப்படி ஒரு விபத்தா.. 4 பேர் உடல் சிதறி உயிரிழந்த பரிதாபம்..!

Published : Jan 01, 2022, 02:04 PM IST
ஐயயோ.. புத்தாண்டு அதுவும் இப்படி ஒரு விபத்தா.. 4 பேர் உடல் சிதறி உயிரிழந்த பரிதாபம்..!

சுருக்கம்

இன்று காலையும் தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலைக்கு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ பக்கத்து அறைகளுக்கும் பரவியது. அங்கு இருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதனால் ஆலையில் பணியாற்றி கொண்டிருந்த தொழிலாளர்கள் அங்கும், இங்கும் சிதறி ஓடினர்.

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 தொழிலாளர்கள்  உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது நத்தம்பட்டி. இங்கிருந்து சிவகாசி எம்.புதுப்பட்டி செல்லும் சாலையில் உள்ள களத்தூரில் ஆர்.கே.வி.எம். பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இதனை வழிவிடு முருகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆலையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இன்று காலையும் தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலைக்கு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ பக்கத்து அறைகளுக்கும் பரவியது. அங்கு இருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதனால் ஆலையில் பணியாற்றி கொண்டிருந்த தொழிலாளர்கள் அங்கும், இங்கும் சிதறி ஓடினர்.

இதுகுறித்து சிவகாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பட்டாசுகள் வெடித்ததில் ஆலையில் இருந்த 2 அறைகள் முற்றிலுமாக தரைமட்டமாகின. இந்த விபத்தில் 4 பேர் இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

கிளிமஞ்சாரோ சிகரத்தில் தமிழக சிறுவர்களின் இமாலய சாதனை! ரூ.1,00,000-ஐ அள்ளிக்க கொடுத்த நயினார் பாலாஜி! என்ன காரணம்?
இந்த சோகத்துக்கு ஒரு முடிவே இல்லையா? வெடி விபத்தில் தூள் தூளாக சிதறிய பட்டாசு ஆலை! 4 பேர் பலி!