ராஜபாளையத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இறுதிச்சடங்கில் பங்கேற்றே உறவினர்கள் பீதி அடைந்துள்ளனர்.
ராஜபாளையத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இறுதிச்சடங்கில் பங்கேற்றே உறவினர்கள் பீதி அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி (45). உடல் நிலை சரியில்லாத நிலையில் கடந்த 26-ம் தேதி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சாதாரண காய்ச்சல் எனக் கூறி பார்வதியை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டனர். ஆனால், வீட்டுக்குச் சென்ற பார்வதிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
undefined
இதனையடுத்து, பார்வதி மீண்டும் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பார்வதி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 30-ம் தேதி சிகிச்சை பலனின்றி பார்வதி உயிரிழந்தார்.
மேலும், கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்கு முன் கடந்த 30-ம் தேதி அன்றே உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்து பார்வதியின் நல்லடக்கம் செய்தனர். இந்நிலையில், உயிரிழந்த பார்வதிக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் பார்வதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அவரது உறவினர்கள் பீதி அடைந்துள்ளனர். ஏற்கனவே சேலத்தில் இறுதி சடங்கில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.