விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை? பிரேமலதாவின் பேச்சு சிறுபிள்ளை தனமாக உள்ளது - மாணிக்கம் தாகூர்

By Velmurugan s  |  First Published Jun 10, 2024, 5:34 PM IST

விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளது சிறுபிள்ளை தனமாக இருப்பதாக அத்தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.


மதுரை திருநகர் எம்பி அலுவலகத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வாளுக்கு வேலி அம்பலத்தின் 223ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த முறையும் மீண்டும் தமிழகத்தை பாஜக அரசு வஞ்சிக்கிறது. ஒரு கேபினட் அமைச்சரை தமிழகத்திற்கு பாஜக கொடுத்திருக்க வேண்டும். ஒரு கேபினட் அமைச்சரையே அமர வைக்க இந்த அரசருக்கு மனமில்லை.

விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் தோல்வியை தழுவியதால் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் விஜய பிரபாகரன் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறினார்கள். விருதுநகர் தேர்தலில் வீடியோ கண்காணிப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்ற பிறகு அடுத்த நாள் சென்னையில் அமர்ந்து பிரமலதா விஜயகாந்த் பேசுவது சின்ன பிள்ளைத்தனமாக உள்ளது. பொறுப்பில்லாத பேச்சை பிரேமலதா விஜயகாந்த் செய்கிறார்.

Latest Videos

பீகாரில் ரூ.1500, தமிழ் நாட்டில் 2.5 லட்சம்; குழந்தை இல்லாதவர்களை டார்கெட் செய்த வடமாநில தம்பதி

மூன்றாவது முறையாக விருதுநகர் தொகுதியில் தேமுதிக தோல்வியை தழுவி இருக்கிறது. பாஜக ஆயுட்காலம் இந்த முறை பிகார் தேர்தலில் முடிந்து விடும். இந்தியா கூட்டணியில் பீகாரில் ஆட்சி அமையும். எப்போது பாஜக ஆட்சி அமைகிறதோ அப்போது எல்லாம் தீவிரவாத தாக்குதல் நடைபெறுகிறது. பலமான நாடு, பாதுகாப்பான நாடு என கூறும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கு தலை குனிய வேண்டும். விஜயகாந்த் இருக்கும் பொழுது தேமுதிக விருதுநகர் தொகுதியில் தோல்வி தழுவி இருக்கிறார்கள். 

தமிழக அரசியலில் 20 சதவீதம் வாக்குகள் அதிமுக, திமுகவுக்கு எதிராக இருக்கும். 70 சதவீத வாக்குகள் அதிமுகவா, திமுகவா என்று இருக்கும். பாஜகவின் வளர்ச்சியை பற்றி அதிமுக தான் யோசனை செய்ய வேண்டும். திமுகவிற்கும், அதன் கூட்டணிக் கட்சிக்கும் பாஜகவின் வளர்ச்சி பெரிதாக இல்லை.

பிரதமர் மோடியிடம் தமிழர்களுக்கு தனி நாடு கோரிக்கையை முன்வைப்பேன் - மதுரை ஆதீனம் பரபரப்பு பேச்சு

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெள்ளை மனம் படைத்தவர். அவர் தனது எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி குறித்து ஒரு பதிவு செய்தார். அதற்கு நாங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தோம். விருதுநகர் தொகுதியை பொருத்தவரை மதுரை விமான நிலையம் கையகப்படுத்துவது, கூடுதல் பாதையை விரிவாக்கம் செய்வது, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் முடிக்கப்பட வேண்டும். ரயில்வே துறையில் உள்ள திட்டங்களை விரைந்து முடிக்கப்பட வேண்டும், திருமங்கலம் ரயில்வே நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். கைவிடப்பட்ட மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், சென்னையில் இருந்த நட்சத்திரங்கள் இரவு வரும் போது எப்படி வானத்தில் நட்சத்திரம் தோன்றுமோ அதேபோல் விருதுநகர் தொகுதிக்கு வந்திருந்தார்கள். பகல் வந்ததும் நட்சத்திரம் எப்படி மறையுமோ அதேபோல் போட்டியிட்ட நட்சத்திரங்கள் தற்போது சென்னை சென்றிருக்கிறது என கூறினார்.

click me!