புதிய மாநகராட்சியாக சிவகாசி உருவாக்கபடுவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் சுமார் ரூ.380 கோடியில் 22 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் புதிய மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினர்.
undefined
அப்போது பேசிய முதல்வர், சிவகாசியை மாநகராட்சியாக்கும் பூர்வாங்கப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் அங்கு உட்கட்டமைப்பு வாதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறினார். விருதுநகரில் மருத்துவ கல்லூரி அமைய இருப்பதன் மூலம் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றி இருப்பதாக முதல்வர் குறிப்பிட்டார். மேலும் 2025க்குள் காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
விழாவில் 234 கோடி ரூபாய் செலவில் நிறைவடைந்திருக்கும் தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இவற்றுடன் விருதுநகர் நகராட்சி பகுதியில் 444 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பில் தாமிரபரணி புதிய கூட்டு குடிநீர் திட்டம் உள்பட பல்வேறு புதிய திட்டங்களுக்கும் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுகவினர் என ஆயிரக்கணக்கோனோர் பங்கேற்றனர்.