'வாக்குப்பெட்டியின் சாவியை காணோம்'..! விருதுநகரில் நிகழ்ந்த விசித்திரம்..!

By Manikandan S R S  |  First Published Jan 2, 2020, 12:25 PM IST

அருப்புக்கோட்டை அருகே வாக்குப் பெட்டியின் சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி இருக்கிறது.


நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு நாட்களிலும் அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குப் பதிவுக்குப் பிறகு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் இருந்தது.

Tap to resize

Latest Videos

undefined

உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 7 மணி அளவில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வாக்கு பெட்டிகளின் சீலை உடைத்தனர். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதை தொடர்ந்து மக்கள் அளித்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அருப்புக்கோட்டை அருகே வாக்குப் பெட்டியின் சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஒரு பகுதியில் பதிவான தபால் வாக்குப் பெட்டியின் சாவி தொலைந்து போய் இருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மாற்று சாவிக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் மேலும் தாமதமானதால் சுத்தியல் கொண்டு தபால் ஓட்டுப் பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. இதேபோல பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகி இருக்கின்றது.

click me!