ராதிகாவுக்கு மட்டுமல்ல, விருதுநகரில் ஒவ்வொரு தாய்க்கும் நான் மகன் தான்; கேப்பில் ஸ்கோர் செய்யும் விஜயபிரபாகரன்

Published : Mar 27, 2024, 11:18 AM IST
ராதிகாவுக்கு மட்டுமல்ல, விருதுநகரில் ஒவ்வொரு தாய்க்கும் நான் மகன் தான்; கேப்பில் ஸ்கோர் செய்யும் விஜயபிரபாகரன்

சுருக்கம்

தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் எனக்கு மகன் போல் என்று ராதிகா தெரிவித்திருந்த நிலையில், ராதிகா மட்டுமல்ல, விருதுநகரில் ஒவ்வொரு தாய்க்கும் நான் மகன் தான் என பதில் அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனிடையே நட்சத்திர வேட்பாளர்களின் ஸ்டார் தொகுதியில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். இவருக்கு போட்டியாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும், தற்போதைய எம்.பி. மாணிக்கம் தாகூரும் களம் காண்கின்றனர்.

விஜயபிரபாகரன் எனக்கும் மகன் போல தான் என ராதிகா சரத்குமார் கூறிய கருத்து அவரை சற்று திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக விஜயபிரபாகரன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நான் ராதிகா அம்மாவுக்கு மட்டுமல்ல விருதுநகர் தொகுதியில் ஒவ்வொரு தாய்மாரும் என்னை அவர்களின் மகன் போல தான் பார்க்கிறார்கள்.

காத்திருக்க வேண்டாம்: இன்றே ராஜினாமா செய்யுங்கள்; தேனி எங்களுக்கு தான் - அமைச்சர் மூர்த்திக்கு, உதயகுமார் பதில

எனது தந்தை இறந்து 100 நாட்கள் கூட நிறைவு பெறாத நிலையில், மிகப்பெரிய பொறுப்பை நான் ஏற்றுள்ளேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று ஏற்கனவே தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் இது நடக்கும் என்று நினைக்கவில்லை. இந்த தருணத்தில் எனது தந்தை உயிருடன் இருந்திருந்தால் எனக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கும். இருப்பினும் நாங்கள் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தோடு கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம் அதனை பயன்படுத்தி நான் சமன் செய்து கொள்வேன்.

“திருமாவளவனின் வெற்றி காலத்தின் கட்டாயம்” கடலூரை அதிரவைத்த திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள்

அரசியலில் வெற்றி பெற்று மக்களுக்கு எந்த அளவுக்கு நல்லது செய்யவேண்டும் என எனது தந்தை நினைத்தாரோ அதைவிட அதிகமாக செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். எய்ம்ஸ் மருத்துவமனை, விமான நிலையம் உள்ளிட்ட திட்டங்கள் கிடப்பில் உள்ளன. அவற்றை நிறைவேற்றி, விருதுநகர் தொகுதியை சிறப்பான தொகுதியாக மாற்றுவதே எங்கள் நோக்கம் என்றார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கிளிமஞ்சாரோ சிகரத்தில் தமிழக சிறுவர்களின் இமாலய சாதனை! ரூ.1,00,000-ஐ அள்ளிக்க கொடுத்த நயினார் பாலாஜி! என்ன காரணம்?
இந்த சோகத்துக்கு ஒரு முடிவே இல்லையா? வெடி விபத்தில் தூள் தூளாக சிதறிய பட்டாசு ஆலை! 4 பேர் பலி!