குடிபோதையில் வகுப்பில் தள்ளாடிய மாணவர்கள் !! - நீதிபதியின் கனிவான கவனிப்பு .....

By Asianet Tamil  |  First Published Aug 14, 2019, 5:34 PM IST

குடித்துவிட்டு வகுப்பறைக்கு வந்து கலாட்டா செய்த மாணவர்களுக்கு , காமராஜர் இல்லத்தை சுத்தம் செய்யும்  தண்டனையை மதுரை மாவட்ட நீதிபதி வழங்கியுள்ளார் .
 


விருதுநகர் மாவட்டம் , அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஒரு கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்பு நேரத்தில் நன்றாக குடித்து விட்டு வந்துள்ளனர் . வகுப்பறையில் தள்ளாடியபடி இருந்த அவர்களை கண்ட பேராசிரியர் , துறைத் தலைவரிடம் அழைத்துச் சென்றுள்ளார் . பின்னர் அவர்களை கல்லூரியில் இருந்து நீக்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

Tap to resize

Latest Videos

undefined

இதை எதிர்த்து மாணவர்கள் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர் . வழக்கை விசாரித்த நீதிபதி மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு விசித்திரமான தண்டனை வழங்கினார் .

அதன்படி , மாணவர்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 15 அன்று விருதுநகர் காமராஜர் இல்லத்தை காலையில் இருந்து சுத்தம் செய்ய வேண்டும் . பின்னர்  மாலையில் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு  குடிப்பதால் ஏற்படும் தீங்குகளை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்த வேண்டும் . இதை அவர்கள் செய்யும் பட்சத்தில் கல்லூரியில் சேர்த்து கொள்ளலாம்.

இதை அனைத்தையும் கல்லூரி பேராசிரியர் ஒருவரும் , விருதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டரும்  கண்காணித்து நீதிமன்றத்தில்  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மனுதாரர்கள் இதை செய்ய தவறும் நிலையில் கல்லூரி நிர்வாகம் அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுத்து கொள்ளலாம் என நீதிபதி சுரேஷ் குமார் கூறியுள்ளார் .

click me!