சாலை விபத்தில் மயங்கிய குழந்தை... பதறிபோய் ஓடோடி வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...!

By vinoth kumarFirst Published Mar 26, 2019, 5:12 PM IST
Highlights

விருதுநகர் அருகே சாலை விபத்தில் சிக்கிய குழந்தை உட்பட 3 பேரை மீட்டு தனது காரில் ஏற்றிக்கொண்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 
மருத்துவமனையில் அனுமதித்தார். 

விருதுநகர் அருகே சாலை விபத்தில் சிக்கிய குழந்தை உட்பட 3 பேரை மீட்டு தனது காரில் ஏற்றிக்கொண்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 
மருத்துவமனையில் அனுமதித்தார். 

தமிழகத்தில் மக்களவை மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒரு கட்டமாக நடைபெறுகிறது. இதனையடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பிரச்சாரத்திற்காக காரில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சென்றிக்கொண்டிருந்தார்.

அப்போது விபத்தை சிக்கியவர்களை கண்ட அமைச்சர் இருவரையும் தன் காரில் ஏற்றி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்தார். மேலும், அவ்விபத்து பாதிப்பால் மயங்கிய குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்தார். இதனையடுத்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டது பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

click me!