மர்ம காய்ச்சலில் விழுப்புரம் வாலிபர் பலி..! பீதியில் மக்கள்..!

மேல்சிகிச்சைக்காக புதுவை மாநிலம் மதகடிப்பட்டு இருக்கும் மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முஜிபூர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

youth died due to mysterious fever near vilupuram

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இருக்கிறது மீனம்பூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஆரிப்கோகன். இவரது மகன் முஜிபூர் (22). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் சென்னை வேளச்சேரியில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தீராத காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் காய்ச்சல் தீரவில்லை.

youth died due to mysterious fever near vilupuram

Latest Videos

இதனால் மேல்சிகிச்சைக்காக புதுவை மாநிலம் மதகடிப்பட்டு இருக்கும் மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முஜிபூர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவர் உயிரிழந்த தகவல் அறிந்து பெற்றோரும் உறவினர்களும் கதறி துடித்தனர். இதனிடையே முஜிபூர் கொரோனா பாதிப்பால் தான் உயிரிழந்தார் என காட்டுத்தீ போல தகவல் வேகமாக பரவியது.

ஐ.டி நிறுவனங்களுக்கு சிறப்பு விடுமுறை..? கொரோனா பதற்றத்தில் இந்தியா..!

ஆனால் அதை மறுத்த மருத்துவமனை நிர்வாகம் முஜிபூரின் ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பரிசோதனையின் முடிவில் தான் அவர் எதனால் இறந்தார் என்பது தெரிய வரும் என்று கூறியுள்ளனர். அதுவரையில் அவரது உடல் மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சுகாதாரத்துறையினர் தற்போது விசாரணையில் இறங்கியுள்ளனர். முஜிபூர் சென்னை தேனாம்பேட்டையில் தங்கி சைதாப்பேட்டையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் அங்கு சென்றும் அதிகாரிகள் கள ஆய்வு நடத்த இருக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 9 பேர் மட்டும் வீடுகளில் தொடர் கண்காணிப்பில் உள்ள நிலையில் மர்ம காய்ச்சலில் வாலிபர் ஒருவர் பலியாகி இருப்பது மக்களிடையே பீதியை கிளப்பி இருக்கிறது.

இந்து முன்னணி பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்..! கோவையில் பரபரப்பு..!

click me!