சிவகங்கையில் ஆயுதப்படை போலீசார் யோகேஸ்வரன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் செஞ்சி காட்டுப்பகுதியில் போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கையில் ஆயுதப்படை போலீசார் யோகேஸ்வரன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் செஞ்சி காட்டுப்பகுதியில் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நடுநெல்லிமலை கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சரவணன் (26). இவர் செஞ்சி காவல் நிலையத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் 2-ம் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு பாதுகாப்பு பணிக்கு சரவணன் சென்றிருந்தார். அதன் பின்னர் பணி முடிந்து இரவு 8 மணி அளவில் அவர் வீட்டுக்கு வந்தார்.
undefined
இதையும் படிங்க;- மக்களே உஷார்... சுடு தண்ணீர் வைக்கும் போது பயங்கரம்... மின்சாரம் தாக்கியதில் துடிதுடித்து உயிரிழந்த காவலர்..!
இந்நிலையில், செஞ்சி போலீசார் தகவல் பரிமாற்றத்துக்காக பயன்படுத்தும் வாட்ஸ்-அப் குழுவில் தான் இருக்கும் இடத்தை ஷேர் செய்து விட்டு என்னுடைய கடைசி நிமிடங்கள்... என்னை மன்னிச்சுடுங்க சார்... என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனை பார்த்த சக காவலர்கள் அதிர்ச்சியடைந்து அவரை தொடர்பு கொண்ட போது சரவணனிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.
இதனையடுத்து, போலீசார் செஞ்சி அருகே உள்ள அத்தியூர் காப்புக்காடு பகுதிக்கு விரைந்தனர். அங்குள்ள ஒரு மரத்தில் சரவணன் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அனந்தபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;-
இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். சரவணன் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொணடாரா? அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 3 போலீசார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.