அதிவேகத்தில் சென்று பைக்கில் பயங்கரமாக மோதிய கார்..! தூக்கிவீசப்பட்டு இருவர் பரிதாப பலி..!

Published : Feb 10, 2020, 06:05 PM ISTUpdated : Feb 10, 2020, 06:10 PM IST
அதிவேகத்தில் சென்று பைக்கில் பயங்கரமாக மோதிய கார்..! தூக்கிவீசப்பட்டு இருவர் பரிதாப பலி..!

சுருக்கம்

பைக் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.

சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(27). இவரும் ஆதம்பாக்கத்தை சேர்ந்த அப்துல்காதர்(30) என்பவரும் நண்பர்கள். வேலை சம்பந்தமாக இருவரும் ஒரு பைக்கில் சென்னையில் இருந்து புதுவை செல்ல திட்டமிட்டனர். பைக்கை அப்துல் காதர் ஓட்டி வந்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் மரக்கோணம் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அதே சாலையின் எதிரே புதுவையில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று வந்துள்ளது. அதிவேகத்தில் வந்த கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக சென்றுள்ளது. கூனிமேடு பேருந்து நிலையம் அருகே காரும் அப்துல்காதரின் இருசக்கர வாகனம் வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனம் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் அப்துல் காதர் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

பலத்த காயமடைந்த அவர்கள் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்தவழியாக சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்து வழக்கு பதிந்துள்ள காவலர்கள் விசாரணை நடந்து வருகின்றனர்.

மனநலம் பாதித்த சிறுமியை சீரழித்த கிழவன்..! 4 மாதங்களாக சிறை வைத்து கர்ப்பமாக்கிய கொடூரம்..!

PREV
click me!

Recommended Stories

ஐயோ! இதுக்கா உன்ன டாக்டருக்கு படிக்க வச்சேன்! எங்களை விட்டு போயிட்டியே! அமிர்த வர்ஷினி முடிவுக்கு இதுதான் காரணமா?
100 கி.மீ வேகம்! குறுக்கே வந்த வாகனம்! சுக்கு நூறாக நொறுங்கிய KTM பைக்! இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!