கணவர் இறந்த அதிர்ச்சியில் உயிர்விட்ட மனைவி..! சாவு வீட்டில் நிகழ்ந்த பெருந்துயரம்..!

கணவரின் உடலைக்கண்டு அழுதவாறே இருந்த சின்னப்பிள்ளை நேற்று காலையில் மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை பரிசோதித்து பார்த்த போது சின்னப்பிள்ளையும் உயிரிழந்திருந்தார். அதைக்கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். 

husband and wife died on same time

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் நகரைச் சேர்ந்தவர் கண்ணன்(80). இவரது மனைவி சின்னப்பிள்ளை(76). இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் முடிந்து பேரன் பேத்திகளுடன் கண்ணன் மற்றும் சின்னப்பிள்ளை வாழ்ந்து வந்தனர். கணவர் மீது சின்னப்பிள்ளை மிகுந்த அன்போடு இருந்து வந்துள்ளார்.

husband and wife died on same time

Latest Videos

இந்தநிலையில் வயது மூப்பு காரணமாக கண்ணனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கண்ணன் மரணமடைந்தார். அவரது உடலைக்கண்டு சின்னப்பிள்ளையும் உறவினர்களும் கதறி துடித்தனர். கண்ணனின் உடலுக்கு மகன்கள் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். கணவர் இறந்த துக்கத்தில் சின்னப்பிள்ளை மிகுந்த மன வேதனையில் இருந்திருக்கிறார். அவரை உறவினர்கள் தேற்றினர்.

கணவரின் உடலைக்கண்டு அழுதவாறே இருந்த சின்னப்பிள்ளை நேற்று காலையில் மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை பரிசோதித்து பார்த்த போது சின்னப்பிள்ளையும் உயிரிழந்திருந்தார். அதைக்கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். கணவர் உயிரிழந்த துக்கத்தில் மனைவியும் உயிர்விட்டதை அறிந்து சாவுவீட்டிற்கு வந்தவர்களும் சோகமடைந்தனர். இதையடுத்து இறைவரது உடல்களுக்கும் ஒன்றாக இறுதிச்சடங்குகள் நடைபெற்றது.

வயது முதிர்ந்த தம்பதியினர் ஒரே நேரத்தில் உயிர்விட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read: அடுத்தடுத்து தூக்கில் பிணமாக தொங்கிய இளம் தம்பதி..! பரிதவிக்கும் ஒன்றரை வயது குழந்தை..!

click me!