மகளை மடியில் கட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்த இளம்பெண்..! கணவர் இறந்த துக்கத்தில் எடுத்த விரக்தி முடிவு..!

By Manikandan S R S  |  First Published Nov 5, 2019, 11:53 AM IST

நேற்று அதிகாலை தனது குழந்தையுடன் வீட்டின் அருகே இருக்கும் கிணற்றுக்கு சரசு சென்றிருக்கிறார். குழந்தையை தன்னுடன் சேர்த்து துணியால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார். இதில் மூச்சு திணறி தாய், மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இருக்கும் நேமூர் பகுதியைச் சேர்ந்தவர் சரசு(33). இவரது கணவர் கார்த்திகேயன். இந்த தம்பதியினருக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் வைஷாலி என்ற ஆறு வயது பெண்குழந்தை இருந்துள்ளது. கார்த்திகேயன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சரசு ,திருவள்ளுர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் ஆறு மாதத்திற்கு முன்பு, வேலை செய்யும் இடத்தில் நடந்த பிரச்சனை காரணமாக கார்த்திகேயன் தற்கொலை செய்துள்ளார்.

Tap to resize

Latest Videos

அதன்பிறகு, தனது செவிலியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு குழந்தையுடன் தாய் வீட்டில் வந்து சரசு தங்கியிருக்கிறார். நேற்று அதிகாலை தனது குழந்தையுடன் வீட்டின் அருகே இருக்கும் கிணற்றுக்கு சரசு சென்றிருக்கிறார். குழந்தையை தன்னுடன் சேர்த்து துணியால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார். இதில் மூச்சு திணறி, தாய் மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

அந்தப்பகுதியில் இருப்பவர்கள் கிணற்றில் இரண்டு உடல்கள் மிதப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் இறந்த துக்கம் தாளாமல் 6 வயது குழந்தையுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!