ஓட்டுனர் கண்ணியப்பன் குடிபோதையில் பேருந்தை இயக்கியதால், தியாக துருகம் புறவழிச்சாலையில் இருந்து ஊருக்குள் செல்லும் வழியை போதையில் மறந்து, சாலையோர பள்ளத்தில் இறக்கியிருக்கிறார்.
விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று கிளம்பியது. பேருந்தை ஓட்டுனர் கன்னியப்பன் என்பவர் இயக்கியுள்ளார். அந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். தியாக துருகம் புறவழிச்சாலையில் பேருந்து சென்றுக்கொண்டிருந்த போது திடீரென சாலையோரம் இருந்த பள்ளத்தில் பேருந்து இறங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர்.
undefined
பின்னர் எதனால் பேருந்து பள்ளத்தில் இறங்கியது என்று ஓட்டுனரிடம் விசாரித்த போது தான் அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. ஓட்டுனர் கண்ணியப்பன் குடிபோதையில் பேருந்தை இயக்கியதால், தியாக துருகம் புறவழிச்சாலையில் இருந்து ஊருக்குள் செல்லும் வழியை போதையில் மறந்து, சாலையோர பள்ளத்தில் இறக்கியிருக்கிறார்.
இதையடுத்து பயணிகள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் போதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமடையாமல் பெரும் விபத்தில் இருந்து பயணிகள் உயிர்தப்பியதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். ஓட்டுனர் கன்னியப்பன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.