விக்கிரவாண்டி தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்த பெண்ணை அப்பெண்ணின் கணவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக சட்டமன்ற உறுப்பினரின் மறைவைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், T- கொசப்பாளையம் வாக்கு பதிவு மையத்தில் வாக்களிப்பதற்காக கனிமொழி (வயது 49) என்ற பெண் வரிசையில் காத்திருந்தார்.
தமிழகத்தில் முதல்வரை தாண்டி இருவர் சூப்பர் முதல்வராக செயல்படுகின்றனர் - அண்ணாமலை குற்றச்சாட்டு
undefined
அப்போது அங்கு வந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அப்பெண்ணை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நபர்கள் மர்ம நபரை மடக்கி பிடித்தனர். காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய நபர் ஏழுமலை என்றும், அப்பெண்ணின் முன்னாள் கணவர் என்றும் சொல்லப்படுகிறது.
ஓசூரில் சிறுமிக்கு கட்டாய திருமணம்? திருமணமான 3 மாதத்தில் சிறுமி விபரீத முடிவு
இதனைத் தொடர்ந்து ஏழுமலையை கைது செய்து போலீசார் விசாரணைக்காக கஞ்சனூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னாள் மனைவியை கத்தியால் குத்திய ஏழுமலை ஏற்கனவே இரட்டை கொலை வழக்கில் சிறைக்கு சென்று வந்தவர் என கூறப்படுகிறது. இதனிடையே உச்சக்கட்ட பாதுகாப்பில் வாக்குப்பதிவு நடைபெறுவதாக கூறுகையில், வாக்களிக்க வந்த பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாதா என போலிசாருடன் பொதுமக்கள், பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.