தெரு தெருவாக சைக்கிளில் பேப்பர் போட்ட என்னை சுப்ரீட் ஸ்டாராக உயர்த்தியது நீங்கள் தான் - சரத்குமார் பிரசாரம்

By Velmurugan s  |  First Published Jul 8, 2024, 11:57 AM IST

தெரு தெருவாக சைக்கிளில் சென்று பேப்பர் போட்ட என்னை சுப்ரீம் ஸ்டாராக உயர்த்தியது மக்கள் தான் என விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரத்தின் போது நடிகர் சரத்குமார் பேச்சு.


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும்  பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து பாஜகவை சேர்ந்த நடிகர் சரத்குமார் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சங்கீதமங்கலம் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய நடிகர் சரத்குமார், மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வந்துள்ளார் என்றால் அது நல்லாட்சியை காட்டுவதாகவும், விக்கிரவாண்டி தொகுதி எந்த முன்னேற்றமும் இல்லாத நிலை உள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 லட்சத்தை இழந்த விசைத்தறி தொழிலாளி விரக்தியில் விபரீத முடிவு

Tap to resize

Latest Videos

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என திமுகவினர் உள்ளனர். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் பிரசாரம் செய்த தான் காலத்தின் கட்டாயத்தினால் வல்லரசு நாடாக இந்தியா முன்னேற வேண்டும் என்பதால் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளேன். தமிழகத்தில் பலரும் கட்சிகள் நடத்தி வருகிறார்கள். பிறருக்கு துதி பாடும் நிலையில் தான் அவர்கள் உள்ளனர். அரசுக்கு தெரியாமல் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து இருக்க முடியாது. 

தமிழகத்தில் பல இடங்களில் போதை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறது. மகன் தாயை கொல்கிறான், தந்தை மகனை கொல்கிறான். இந்த நிலை தான் தமிழகம் உள்ளது. பிரதமர் பல சீரிய திட்டங்களை தமிழகத்திற்கு பலகோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். தெரு தெருவாக சைக்கிளில் பேப்பர் பேட்டவன் தான் நான். மக்களால் உயர்த்தப்பட்டவன் தான் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் என தெரிவித்தார். 

2026ல் தளபதியை தமிழகத்தின் முதல்வராக்குவோம்; தொண்டர்கள் மத்தியில் புஸ்ஸி ஆனந்த் சபதம்

சரத்குமார் தனது மகள் திருமணத்திற்கு 800 கோடி செலவு செய்துவிட்டதாக தெரிவிக்கிறார்கள். அது எங்க இருக்கிறது என்று எனக்கு தெரியாது. என்னை இப்போ விட்டா கூட மூட்டை தூக்கி பிழைப்பேன். நல்ல பழக்க வழக்கங்கள் உள்ளதால் தான் இன்றும் திடமாக உள்ளதாக கூறினார். 

பகுஜன் சமாஜ் வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். எப்படி பட்ட ஆட்சி நடக்கிறது என்பதை மக்கள் பார்க்க வேண்டும். ஆட்சியும், காட்சியும் மாற வேண்டும். இரு திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்கின்றன. மக்களுக்கான சேவை செய்யும் வேட்பாளர் தான் பாமக வேட்பாளர் சி. அன்புமணி. ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் இரண்டு நாட்களில் அது காணாமல் போய்விடும். அதிமுக வாக்காளார்கள் கூட்டணியில் இல்லாவிட்டாலும், பாமகவிற்கு வாக்களிக்க வேண்டும். இலவசமாக பேருந்து பயணம் என்று கூறிவிட்டு ஓசியில செல்வதாக அமைச்சர் பொன்முடி தெரிவிக்கிறார். இலவச பேருந்து பயணம் என்ற பெயரில் ஏளனம் செய்து கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

click me!