அடுத்தடுத்து எழுந்த புகார்கள்... விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு சீல்!!

By Narendran S  |  First Published Feb 17, 2023, 4:46 PM IST

அடுக்கடுக்கான புகார் எழுந்த நிலையில் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 


அடுக்கடுக்கான புகார் எழுந்த நிலையில் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த தனது மாமாவை காணவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் சலீம்கான் என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸாரும், வருவாய்த்துறையினரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சோதனை நடத்தினர்.

இதையும் படிங்க: போனில் வந்த லிங்கை கிளிக் செய்தவருக்கு; 1 லட்சம் கடன் பெற்றதாக வந்த செய்தியால் அதிர்ச்சி

Tap to resize

Latest Videos

undefined

அப்போது, உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடைபெற்று வருவது தெரியவந்தது. மேலும் அங்கு பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இதையடுத்து 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய அதிசயம்.. காஞ்சிபுரம் 'நடவாவி கிணறு' பௌர்ணமியில் அருள் பாலிக்கும் வரதர்

இதுக்குறித்த விசாரணையில், அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உடல் நலம் குன்றியவர்களை மிரட்டியோ, மயக்கப்படுத்தியோ தங்களின் உடல் இச்சைக்கு பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதை அடுத்து புகாரின் அடிப்படையில் ஆசிரமத்தை நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியர் சி.பழனி உத்தரவிட்டிருந்தார். மேலும் அந்த குற்றச்சாட்டுகள் உறுதியான நிலையில்  நிலையில் அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்துள்ளனர்.  

click me!