
மேல்மலையனூர் கோயிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது ஆட்டோ மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆட்டோவில் மேல்மலையனூர் கோயிலுக்கு சென்றுள்ளனர். ஆட்டோவை சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த குருமூர்த்தி(50), ஓட்டினார். இதில் அவரது உறவினர்களான ஊரப்பாக்கம் ஐயன்சேரியை சேர்ந்த குமரகுரு(50), அவரது மனைவி மஞ்சுளா(45), மகன் விஜயன்(29) ஆகியோர் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க;- சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையின் சிஇஓ மகளை திருமணம் செய்ய இருந்த இளைஞர் திடீர் தற்கொலை! வெளியான காரணம்
கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு மாலையில் ஆட்டோவில் சென்னை நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, ஆட்டோ தீவனூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிர்திசையில் திண்டிவனத்தில் இருந்து செஞ்சியை நோக்கி தார் ஏற்றி வந்து கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில், ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. மோதிய வேகத்தில் லாரியும் கவிழ்ந்தது.
இதையும் படிங்க;- ஒரே நேரத்தில் 3 பேருடன் இயற்கைக்கு மாறாக உறவு இருக்க சொல்லி டார்ச்சர்! கதறிய மனைவி! எஸ்கேப்பான வயாகரா கணவர்.!
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக் குறித்து தகவலறிந்த ரோஷணை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்த 4 பேர்களின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.