புதைந்து கிடக்கும் அன்பு ஜோதி ஆசிரமத்தின் மர்மம்.. 15 பேர் நிலை என்ன? அதிரடி முடிவு எடுத்த டிஜிபி..!

By vinoth kumar  |  First Published Feb 18, 2023, 1:10 PM IST

விழுப்புரம் மாவட்டம், குண்டலபுலியூரில் 'அன்பு ஜோதி' ஆசிரமத்தில் இருந்து சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜபருல்லா (70) என்பவர் உட்பட 15 நபர்கள் ஆசிரமத்தில் காணாமல் போனது தொடர்பாக விழுப்புரம் கெடார் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு.


விழுப்புரத்தில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் இளம் பெண்களுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், பலர் காணாமல் போனதாகவும் தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதுதொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு  வெளியிட்டுள்ளன செய்தி குறிப்பில்;- விழுப்புரம் மாவட்டம், குண்டலபுலியூரில் 'அன்பு ஜோதி' ஆசிரமத்தில் இருந்து சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜபருல்லா (70) என்பவர் உட்பட 15 நபர்கள் ஆசிரமத்தில் காணாமல் போனது தொடர்பாக விழுப்புரம் கெடார் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, கல்கத்தாவைச் சேர்ந்த ரிபானா (30) என்பவர் தன்னை ஆசிரமத்தில் அடைத்து வைத்து, சித்திரவதை செய்து, நிர்வாகி ஜீபின்பேபி பாலியல் வன்புணர்ச்சி செய்ததாகப் புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு. 

Latest Videos

undefined

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமியம்மாள் (80) மற்றும் முத்துவிநாயகம் (48) ஆகியோர் இதே ஆசிரமத்தில் இருந்து காணாமல் போனதாக பெறப்பட்ட புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு, அதேபோல, அனுமதி பெறாமல் ஜீபின்பேபி மற்றும் அவரது மனைவி மரியா விழுப்புரம் மாவட்டம் சின்னமுதலியார்சாவடி என்ற இடத்தில் கடந்த மூன்று மாதங்களாக ஆசிரமம் நடத்தி வந்தது தொடர்பான வழக்கு ஆகிய இந்த நான்கு வழக்குகள் குறித்து பல்வேறு மாநிலங்களில் புலன் விசாரணை செய்யப்பட வேண்டியுள்ளதால் இவ்வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுவதாக சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். 

click me!