அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் அறிக்கையை தாக்கல் செயத்து சிபிசிஐடி... காணாமல் போன நபர் புதைக்கப்பட்டதாக தகவல்!!

By Narendran S  |  First Published Mar 1, 2023, 6:18 PM IST

அன்புஜோதி ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் அவரது உடல் பெங்களூருவில் புதைக்கப்பட்டதாக சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. 


அன்புஜோதி ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் அவரது உடல் பெங்களூருவில் புதைக்கப்பட்டதாக சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் குண்டல புலியூர் கிராமத்தில் அன்புஜோதி ஆசிரமம் இயங்கி வருகிறது. இங்கு மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர்,  மாற்றுத்திறனாளிகள் பலர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த தனது மாமாவை காணவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் சலீம்கான் என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த மனு நீதிபதி சுந்தர் மற்றும் நிர்மல்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சபீருல்லா காணாமல் போன வழக்கு தொடர்பாக சிபிசிஐடியின் அறிக்கையை கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க: அன்புஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண் வாக்குமூலம்… வெளியான பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!

Tap to resize

Latest Videos

undefined

இதையடுத்து, சலீம் கான் நேரில் வந்து அடையாளம் காட்டுவது தொடர்பாக விளக்கமளிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும், முறைகேடுகள் தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரமத்தைச் சேர்ந்த 8 பேர் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த நிலையில் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் சிபிசிஐடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை வெளியானது. அதில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் 8 வகையான 41,009 மனநல மாத்திரைகள் ஆசிரமத்தில் இருந்தது.

இதையும் படிங்க: கோத்தகிரியில் பள்ளி அருகே உலா வந்த கரடியால் பரபரப்பு!

அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் மாத்திரைகள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என தெரியவில்லை. தமிழக, கர்நாடக போலீசாரின் போலி லெட்டர் பேட், சீல்களை பயன்படுத்தி ஆசிரம வாசிகளை இடமாற்றம் செய்தது அம்பலமாகியது. குரங்குகளை வைத்து ஆசிரமவாசிகளை அச்சுறுத்தியதும் அம்பலமானது. ஆசிரமத்தில் இருந்து வீடு திரும்பிய பெண்களிடம் விசாரித்த பின் முழு விபரம் தெரியவரும். அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து காணாமல் போனதாக சொல்லப்பட்ட நபர் பெங்களூருவில் புதைக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. விழுப்புரம் ஆசிரமத்தில் இருந்து தப்பிய ஜெபருல்லாவின் அடையாளத்தில் ஆண் சடலம் பெங்களூருவில் கடுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் இருக்கும் ஜெபருல்லாவின் உறவினர்கள் ஒத்துழைத்தால், டிஎன்ஏ பரிசோதனை செய்ய தயார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!