ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நாங்க எதிர்ப்பது ஏன்? திருச்சி சிவா பரபரப்பு விளக்கம்...

By sathish k  |  First Published Aug 31, 2019, 3:24 PM IST

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்ப்பது ஏன்? என்பது குறித்து திருச்சி சிவா எம்.பி பதில் அளித்தார்.
 


தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்ப்பது ஏன்? என்பது குறித்து திருச்சி சிவா எம்.பி பதில் அளித்தார்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி மற்றும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நேற்று நடந்தது.  இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. பங்கேற்று பேசினார். 

Tap to resize

Latest Videos

undefined

அவர் பேசுகையில்... கருணாநிதியின் மறைவை யாராலும் மறக்க இயலாது. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கருணாநிதி கால் பதித்து இருக்கிறார். மு.க.ஸ்டாலினும் தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். தி.மு.க. நிர்வாகிகளையும் செல்லும்படி கூறுகிறார். எனவே மக்களின் அனைத்து பிரச்சினைகளும் தி.மு.க.வுக்கு தெரியும்.

தி.மு.க. ஆட்சியில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாங்கும் சக்தி அனைத்தும் இருந்தது. ஆனால் தற்போது கல்வி தரவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் வேலை கிடைப்பது இல்லை. வேலை கிடைத்தாலும் அது நிரந்தரமாக இருப்பதில்லை. படித்த ஆண்களும், பெண்களும் மாதம் 4000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கிறார்கள். அதே சமயத்தில் ஒரு தொழிலாளி தினமும் 400 ரூபாய் சம்பாதிக்கிறான்,இந்த நிலை மாற வேண்டும்.

தமிழகத்தில் விவசாயம் நலிந்து வருகிறது. இதற்காகத் தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம், இதுபோன்ற திட்டங்களால் எதிர்காலத்தில் பணப்புழக்கம் இருக்கும். ஆனால் சாப்பிட உணவு இருக்காது. எனவே இதுபோன்ற திட்டங்கள் தமிழகத்துக்கு வேண்டாம். இதை கேட்க தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் இல்லை என இவ்வாறு அவர் கூறினார்.

click me!