காவல் நிலையத்தில் வைத்து போலீசை வெளுத்து வாங்கிய தந்தை, மகன்கள்..!

By vinoth kumar  |  First Published Aug 30, 2019, 1:44 PM IST

செஞ்சியில் காவல் நிலையத்தில் புகுந்து போலீசாரை கொடூரமாக தாக்கிய தந்தை, மகன் இருவருரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


செஞ்சியில் காவல் நிலையத்தில் புகுந்து போலீசாரை கொடூரமாக தாக்கிய தந்தை, மகன் இருவருரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் காவல் ஆய்வாளர் குமார் மற்றும் போலீசார் காந்தி பஜாரில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக குடிபோதையில் உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் வந்த நாகம்பூண்டியை சேர்ந்த நாகராஜ் (23), ரமேஷ்(25) ஆகியோரின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதுதொடர்பாக அவரது தந்தை அல்லிமுத்து தகவல் தெரிவிக்கப்பட்டு ஆவணத்துடன் காவல் நிலையத்துக்கு விரைந்தார். ஆனால், ஆவணங்களைக் காட்டி வாகனத்தை மீட்க வந்த தந்தையும், இரு மகன்களும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை பார்த்த போலீஸ்காரர் ஜெயசங்கர், தகராறை விலக்கி விட முயன்றார். இதில் ஆத்திரமடைந்த அல்லிமுத்து தனது மகன்கள் நாகராஜ், ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து போலீஸ்காரர் ஜெயசங்கரை தாக்கினார். 

இதில் காயமடைந்த ஜெயசங்கர் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து அல்லிமுத்து, நாகராஜ், ரமேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

click me!