பேஸ்புக்கில் ஒரு வருஷம் லவ்... எதிர்ப்பை சமாளித்து திருநங்கையை கல்யாணம் பண்ணிய வாலிபர்… குவியும் வாழ்த்துகள்!!

By sathish kFirst Published Aug 8, 2019, 2:21 PM IST
Highlights

இன்றைய காலத்தில் சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியால் பலர் பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவை மூலம் ஒருவரையொருவர் பார்க்காமலும், கண்டம் விட்டு கண்டம் கடந்தும் காதலித்து, காதலித்து கல்யாணம் செய்து கொண்டது பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் பார்த்திருக்கிறோம். அதேபோல் ஒரு திருநங்கையும், வாலிபரும் பேஸ் புக் மூலம் பழகி காதலித்து கல்யாணம் செய்து கொண்ட சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.

இன்றைய காலத்தில் சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியால் பலர் பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவை மூலம் ஒருவரையொருவர் பார்க்காமலும், கண்டம் விட்டு கண்டம் கடந்தும் காதலித்து, காதலித்து கல்யாணம் செய்து கொண்டது பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் பார்த்திருக்கிறோம். அதேபோல் ஒரு திருநங்கையும், வாலிபரும் பேஸ் புக் மூலம் பழகி காதலித்து கல்யாணம் செய்து கொண்ட சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் சாலைக்கரையை சேர்ந்தவர் சேகர் அமுதா தம்பதி மகள் அமிர்தா, திருநங்கையான இவருக்கு, பேஸ்புக் மூலம் சின்னசேலத்தை சேர்ந்த லட்சுமணனுடன் என்பவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலந்துள்ளது.

மும்பையில் பாலிவுட் படங்களுக்கு செட் அமைக்கும் பணியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த லட்சுமணன், திருநங்கை அமிர்தாவை காதலிப்பது பற்றி பெற்றோருக்கு தெரிவித்தார். அதற்கு சம்மதம் தெரிவித்த பெற்றோர், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்தனர்.

இந்நிலையில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று காலை திருநங்கை அமிர்தாவும், லட்சுமணனும் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தை கோவிலுக்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

இதுகுறித்து அமிர்தா கூறியதாவது; நான் பி.எஸ்சி படித்து விட்டு, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்காக படித்து வருகிறேன். போலீஸ் வேலைக்கும் முயற்சி செய்து வருகிறேன். நான் கடந்த 2 ஆண்டுகளாக மும்பையில் இருந்தேன். அப்போது முகநூல் மூலம் எனக்கும், லட்சுமணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பழகி வந்த நாங்கள், பின்னர் காதலிக்க தொடங்கினோம்.

கடந்த ஒரு வருஷமாக நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்து, நாங்கள் காதலிப்பது பற்றி பெற்றோரிடம் தெரிவித்தோம். இதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். எங்கள் திருமணத்தை முறைப்படி பதிவுசெய்து, திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நடத்த முடிவுசெய்தோம். ஆனால் நாங்கள் கோவிலில் திருமணம் செய்வதற்கு, கோவில் அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து, அனுமதி பெற்று கோவிலில் திருமணம் செய்துகொண்டோம் என்றார்.

இதுகுறித்து மணமகன் லட்சுமணன் கூறுகையில்.. கடந்த வருஷமாக காதலித்து வந்தோம். முதலில் எனது பெற்றோரிடம் கூறியபோது அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி, அமிர்தாவை திருமணம் செய்வதற்கு சம்மதம் வாங்கி, திருமணம் செய்து கொண்டேன் என்றார்.

click me!