கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் 39 உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன - ஆட்சியர் தகவல்

By Velmurugan s  |  First Published Jun 22, 2024, 7:35 PM IST

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களில் 39 பேரின் உடல்கள் தகனம் மற்றும் அடக்கம்  செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் கருணாபுரம் பகுதியில் கள்ளசாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாத் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருந்த 5 பேர் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

மாடு திருடி மாட்டிக்கொண்ட வடமாநில நபர்; சமயோஜித புத்தியால் 1 அடி கூட வாங்காமல் தப்பித்த சுவாரசியம்

Tap to resize

Latest Videos

undefined

அதேபோல் உயிரிழந்தவர்களில் 39 பேரின் உடல்கள் தகனம் அல்லது அடக்கம் செய்யப்பட்டுள்ளன. கள்ளச்சாராயம் புழக்கம் இருந்ததாக 20 இடங்கள் கண்டறியப்பட்டு மருத்துவக் குழுவினர் அந்த பகுதிகளில் சாராயம் அருந்தியவர்களை கண்டறியும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் வீட்டிலேயே இருந்த 55 பேர் இதுவரை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சுயமரியாதை திருமணத்தை ஆதரிப்பவர்கள் முதலில் தங்கள் பிள்ளைகளுக்கு அதை செய்யுங்கள் - ரஞ்சித் ஆவேசம்

இதனிடையே தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த தவறியதாகக் கூறி தமிழகம் முழுவதும் இன்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். இதே போன்று அதிமுக, கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஐ கடந்துள்ள நிலையில் மேலும் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

click me!