Kallakurichi: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கி ஊக்கப்படுத்துவதா? - பிரேமலதா

By Velmurugan sFirst Published Jun 20, 2024, 4:13 PM IST
Highlights

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாக்டிகட்டில் அடைத்து விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்து 120க்கும் அதிகமான பொதுமக்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஐ கடந்துள்ளது. மேலும் சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு இந்த மருத்துவமனையில் குவித்து வைத்துள்ள காவலர்களை பயன்படுத்தி இருந்தாலே கள்ளச்சாராய விற்பனையை தடுத்திருக்கலாம். ஆனால் அதற்கு அரசு முயற்சிக்கவில்லை. அடுத்து வரக்கூடிய விக்கிரவாண்டி தேர்தல் தான் அவர்கள் இலக்கு. ஏற்கனவே வாக்காளர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்கலாம் என திட்டமிட்டிருந்தனர். தற்போது இந்த விபத்து காரணமாக கூடுதலாக ரூ.2 ஆயிரம் கொடுத்து வெற்றி பெற முயல்வார்கள்.

Latest Videos

Kallakurichi Inicident: விஷ சாராய மரண செய்தியை பார்த்துவிட்டு சாராயம் குடித்த மக்கள்; பெண்கள் உள்பட 5 பேர் இன்று அனுமதி

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவது தவறான முன்னுதாரணமாக அமையும். இது அவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக மாறிவிடும். நாம் கள்ளசாராயம் அருந்தி உயிரிழந்தால் நமது குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் கிடைக்கும் என்று ஏழைகளின் மனதில் எண்ண நினைக்கும். 

விஜய் தான் விதிவிலக்கு; மானத்தமிழன் மாண்டுபோவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துரை - ஜெயக்குமார் எச்சரிக்கை

மேலும் கடந்த ஆட்சி காலத்திலும் இதுபோன்று நடைபெற்றுள்ளதாக ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், கடந்த ஆட்சியில் நடந்த தவறுகளால் தான் மக்கள் உங்களுக்கு வாய்ப்பளித்து உள்ளனர். அப்படியென்றால் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாறாக பிறரை குறைகூறக் கூடாது. போதை இல்லா தமிழகம் தான் எனது லட்சியம் என்று சொன்ன முதல்வரின் வார்த்தைகள் என்னவானது? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

click me!