முகநூலில் சவால் விட்ட பாமக ஒன்றிய செயலாளர்... இருட்டில் இழுத்து சென்று புரட்டி எடுத்த போலீஸ்...!

By vinoth kumarFirst Published Apr 12, 2020, 12:18 PM IST
Highlights

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். பாமக கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். இவர் எப்போதும் முகநூலில் ஆக்டிவாக உள்ள சக்திவேல் பாமக தொண்டர்களை பொய் வழக்குகள் மூலமாக இனி தொடர வேண்டும் என்று நினைத்தால், தான் கட்சியின் தொண்டர்களுக்கும், தன் சமுதாய மக்களுக்காகவும் தனது உயிரை விடவும் தயங்கமாட்டேன் 

பாமக நிா்வாகி மீதான தாக்குதல் புகாரைத் தொடா்ந்து சின்னசேலம் காவல் ஆய்வாளா் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். பாமக கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். இவர் எப்போதும் முகநூலில் ஆக்டிவாக உள்ள சக்திவேல் பாமக தொண்டர்களை பொய் வழக்குகள் மூலமாக இனி தொடர வேண்டும் என்று நினைத்தால், தான் கட்சியின் தொண்டர்களுக்கும், தன் சமுதாய மக்களுக்காகவும் தனது உயிரை விடவும் தயங்கமாட்டேன் என்றும், சின்னசேலம் காவல் ஆய்வாளா் சுதாகா் அவர்களுக்கு எச்சரிகையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முகநூலில் கருத்து பதிவிட்டார். இவரது பேச்சு வலைதளங்களில் வைரலானது. 

இதனையடுத்து, பார்த்து கடுப்பான காவல் ஆய்வாளர் சுதாகர் சாதாரண உடையில் இருசக்கர வாகனத்தில் சக்திவேலின் கிராமத்திற்கு சென்ற வீட்டின் அருகே நண்பருடன் பேசிக்கொண்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். ஆனாலும், அடி உதைக்கு சற்றும் அஞ்சி நடுங்காமல் முகநூலில் பதிவிட்டு தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் தாக்குவது ஏன் என்று குரல் எழுப்பினார். மீண்டும் சக்திவேலை தாக்க தொடங்கினார். இதனையடுத்து, போலீஸ் வாகனம் வரழைக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.ஜெயச்சந்திரன் பார்வைக்கு காவல் ஆய்வாளர் சுதாகர் தாக்கிய தொடர்பான வீடியோ காட்சிகள் கொண்டு செல்லப்பட்டது. விசாரணை மேற்கொண்ட பிறகு காவல் ஆய்வாளர் சுதாகரை ஆயுதப் படைக்கு  பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இதனிடையே, குடிபோதையில் இருந்த காவல்துறை ஆய்வாளரால் வீடுபுகுந்து கடுமையாக தாக்கப்பட்ட ஒன்றிய செயலாளர் தம்பி சக்திவேலிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்தார். பின்னர், சிறப்பான மருத்துவம் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். மேலும்,  சக்திவேலை தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பா.ம.க. வழக்கறிஞர் சிவராமன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

click me!