அதிமுக பிரமுகர் மகனுக்கு கொரோனா... சிகிச்சை அளித்த மருத்துவர், செவிலியர் தனிமை... செஞ்சியில் பதற்றம்..!

By vinoth kumarFirst Published Apr 11, 2020, 3:28 PM IST
Highlights

சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் உள்ள கடைகளில் பணிபுரிந்த மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால், மார்ச் 10 முதல் 17 வரை ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்றவர்கள் மற்றும் ஃபீனிக்ஸ் மாலில் உள்ள கடைகளில் பணிபுரிவோர் அனைவரும் தாமாக முன்வந்து தகவல் கொடுத்து தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியது.

செஞ்சி  நகரம் அதிமுக பிரமுகரும், விஆர் மில்க் ஓனர் மற்றும் தொழிலதிபரின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டு வருகின்றன. சமுதாயப் பரவல் ஏற்பட்டுவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இதனால் 21 நாட்கள் நாடு முழுவதும்  ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையைத் தவிர்த்து வெளியில் வருபவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் உள்ள கடைகளில் பணிபுரிந்த மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால், மார்ச் 10 முதல் 17 வரை ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்றவர்கள் மற்றும் ஃபீனிக்ஸ் மாலில் உள்ள கடைகளில் பணிபுரிவோர் அனைவரும் தாமாக முன்வந்து தகவல் கொடுத்து தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியது.  ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்றவர்களும் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியிருப்பதுடன், கொரோனா அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பிரபல அதிமுக பிரமுகரும், தொழிலதிபரின் மகன் சென்னை மாநகராட்சி அறிவித்த தேதிகளில் ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, செஞ்சி தனியார் மருத்துவர் மாரிமுத்துவிடம் சிகிச்சை பெற்றார். ஆனாலும், காய்ச்சல் குறையவில்லை. இதனையடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், தனி வார்டில் தீவிர மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். 

இதனிடையே, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மாரிமுத்து மற்றும் செவிலியர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் விபரமும் தீவிரமாக சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த மருத்துவர் வசிக்கும் வீதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிமுக பிரமுகர் வசிக்கும் பகுதிகளில் சீல் வைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. 

click me!