விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (38). தச்சு தொழிலாளி இவர் மரப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், இன்று காலை வெகுநேரம் ஆகியும் மோகன் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். இதனையடுத்து, உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கதவை உடைத்து பார்த்தபோது மோகன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
undefined
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வளனூர் போலீசார் மோகன், அவரது மனைவி, 3 குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தொழில் தொடங்கவும் குடும்பத்தை நிர்வகிக்கவும் கந்துவட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடன் கொடுத்த நபர் மோகனிடம் பணத்தை தருமாறு வலியுறுத்தியதாகவும் தெரிகிறது. ஒரு கட்டத்தில் வீட்டுக்கு வந்த அந்த கடன் கொடுத்த நபர், மோகனை மிகவும் கேவலமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மோகன், தனது மனைவி, 3 குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.